பாலியல் குற்றச்சாட்டில் கைதான தனுஷ்கவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை

266 0

பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்கவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுடையான நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்  தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைதுசெய்யப்பட்டள்ளதாகவும் இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை (7) நீதிமன்றில் குணதிலக்க ஆஜராக வேண்டுமெனவும் சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் சபை உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும்  ஐ.சி.சி.யுடன்  கலந்தாலோசித்து இது குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொண்டு தனுஷ்க குணதிலக்கவின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.