வட்டுக்கோட்டை-பொன்னாலை வீதியின் புனரமைப்பு பணிகள் 5.4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் நேற்று (04.11.2022) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்-காரைநகர் பேருந்து வழித்தடத்தை புனரமைப்பது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கவனத்துக்கு நேரடியாகவும், கடிதம் ஊடாகவும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.இந்நிலையில், மோசமாக பாதிக்கப்பட்டிருந்த வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியினை மேம்படுத்தும் நோக்கில் 5.4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளன.
கடந்த 20.08.2022 யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, காரைநகர் டிப்போவுக்கு சென்றுள்ளார்.
அதன்போது யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி, மற்றும் காரைநகர் டிப்போவுக்கு செல்லும் வீதி என்பன புனரமைக்கப்பட வேண்டிய அவசியத்தை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 10.09.2022 அன்று இவ்விடயம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துமாறு அமைச்சரிடம் கடிதம் மூலமாகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


