குளவி கொட்டியதில் 6 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

347 0

பதுளை லுணுகலைப் பகுதியின் அடாவத்தை  பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதால் ஆறு தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில், லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் இன்று (04) இடம் பெற்றுள்ளது.

அடாவத்தை பெருந்தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் தேயிலைத் தளிர் கொய்யும் கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மரமொன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து பெண் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியுள்ளன.

ஏனைய தொழிலாளர்கள் புகையினை எழுப்பி, குளவிகளை அடங்கச் செய்து, ஆறு பெண் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஏனையவர்கள் வீடு திரும்பினர்.