மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற நீண்டநேர கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானத்துக்கு வந்ததாக பெற்றோர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையிடு செய்ய மருத்துவ சபை நேற்று தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

