வடக்கிலிருந்து தெற்குக்கான சமாதான செய்தி புறாக்கள் (காணொளி)

318 0

வடக்கிலிருந்து தெற்குக்கான சமாதான செய்தி புறாக்கள் மூலம்  அனுப்பப்பட்டுள்ளன.

பருத்தித்துறை இறங்குதுறையில் இன்று காலை 7.30 மணிக்கு தெற்கு வத்தளை பகுதிக்கு புறாக்கள் மூலம் சமாதன செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

சமாதான புறாக்களை பறக்கவிட்டவர்களால், சமாதானம் மற்றும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் செய்திகளை தாங்கிய துண்டுகள் புறாக்களின் கால்களில் கட்டப்பட்டு பறக்கவிடப்பட்டன.

இன்றைய நிகழ்வில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஜெயலத், பருத்தித்துறை 551ஆவது படையணியின் கேணல் வசந்தகேரத், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி அதிகாரி, சிறுவர் வைத்தியர், ஆசிரியர்கள், புறாக்களின் உரிமையாளர் லோனி டி லனோறொல் தம்பதியினர் ஆகியோரால் 14 சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

சமாதான செய்தியை புறாக்கள் மூலம் அனுப்பும் நிகழ்வு இன்றைய தினம் மூன்றாவது தடவையாக இடம்பெற்றது.

முதலாவது நிகழ்வு கடந்த வருடம் பருத்தித்துறை தெய்வேந்திர முனையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன, சுதந்திர தினத்தன்று இரண்டாவதாக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில்இன்றைய தினம் மூன்றாவதாக அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போது கிடைத்த தகவலின்படி அனுப்பப்பட்ட புறாக்களில் 5 புறாக்கள் வத்தளையை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.