சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட 06 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சேவையின் அவசியத்தை கருதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
அதன்படி அமைச்சுப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.ஜே. பலிஹக்கார, மன்னார் வலயத்திற்கும் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.கே. ஆர். அபோன்சு அமைச்சுப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பீ.சி. வெதமுல்ல மொனராகலை வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் கட்டளையிடும் தகவல் பிரிவில் இருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எச். நிஸ்ஸங்க, இரத்தினபுரி வலயத்திற்கும், பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் டீ.எஸ். பெரேரா, பதில் நிலைய அதிபர் 118 தேசிய உதவிமையம்/சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
லக்கல பொலிஸ் நிலையத்தின் கடமை நேர நிலைய அதிபராக பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் எம்.ஜே.டப்ளியூ.கே. அமரசிங்க, லக்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.