கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் குழாய் நீரின் தரம் தொடர்பில் சந்தேகம்

246 0

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் குழாய் நீரின் தரம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பணி பகிஷ்கரப்பில் ஈடுபட்டுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.பொறியியல் டிப்ளோமா சங்கம் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கமே இவ்வாறு பணி பகிஷ்கரப்பில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு பணி பகிஷ்கரிப்பினால் ஈடுபட்டுள்ளமையினால் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது. இதனால் குழாய் நீரின் தரம் குறைவடைந்திருக்கும் எனவும் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை கொழும்பு அல்லது வேறு பிரதேசங்களுக்கு வழங்கப்படும் நீர் தொடர்பில் பிரச்சினை ஒன்றும் இல்லை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூவ் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.