முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் அடிப்படையில்14.250 கிலோகிராம் கேரள கஞ்வுசாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (16) மாலை 5.30 மணியளவில் மந்துவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்ப்படுத்தவுள்ளனர்.

