அரச அதிகாரிகளிடம் இல்லாதொழிக்கப்பட வேண்டிய கலாச்சாரம்!

343 0
எந்த சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும், நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வதில் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பழக்கப்பட்ட ஆனால் பின்பற்றப்படக் கூடாத கலாச்சாரமொன்று இன்று நடைமுறையிலுள்ளது.
 இந்த கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.