தகவல்தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவது அதிகரிக்கின்றது

180 0

இலங்கையின் தகவல்தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் பெருமளவிற்கு புலம்பெயர்வதால் அந்த தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையின் தகவல்தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் புலம்பெயர்வது அதிகரித்துள்ளதை தொடர்ந்து வரிகள் தொடர்பில் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பிரதான அமைப்புகள்  அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன.

நீண்டகால பாதிப்புகளை தவிர்ப்பதற்காக வரிகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 

தகவல்தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவது முன்னைய வருடங்களை விட அதிகரித்துள்ளது என சைபர் பாதுகாப்பு ஆலோசகர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.

தங்களிற்கு வெளிநாட்டில் அதிகளவு வேலைவாய்ப்புள்ளது என என்னுடைய பணியாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் அதிக அனுபவமுள்ள பிரிவினரான சீனியர் டிவலப்பர்ஸ்  senior developersஅதிகம் புலம்பெயர்கின்றனர்.

இதன் காரணமாக பல நிறுவனங்கள் புதியவர்களை உள்வாங்குவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன,சிலவேளைகளில் விலகியவர்களிற்கு பதில் உள்வாங்கப்பட்டவர்களும்  விலகிச்செல்கின்றனர் கனிஸ்ட ஊழியர்கள் கூட புலம்பெயர தொடங்கியுள்ளனர் என சைபர் பாதுகாப்பு ஆலோசகர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நிறுவனத்தின் ஏ.பி.சி  என அனைத்து பிரிவினரும் வெளியேறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

டொப்ஜொப்பினை ஆராய்ந்தவேளை நடுத்தர முகாமையாளர்களிற்கான வேலைவாய்ப்பு கடந்த வாரம் மாத்திரம் 300 ஆக காணப்பட்டது.

தற்போது ஏற்றுமதி வருமானமாக 1 பில்லியன் டொலர்களை உழைக்கும் தகவல் தொழில்நுட்ப துறை 2025 வருடாந்தம் 65 பில்லியன் டொலர்களை உழைப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இலங்கை சொவ்ட்வயர் சேர்விசஸ் கொம்பனிஸ் சங்கம் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என சங்கத்தின் தலைவர் அசிகியு அலி தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஏதாவது மாற்றங்களை செய்ய முடியுமா என ஆராய விரும்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தகவல்தொழில்நுட்ப  துறையை சேர்ந்தவர்கள் புலம்பெயர்வதற்கு 36 வீத தனிப்பட்ட வருமானவரியே முக்கிய காரணம்என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.