முகத்தை முழுமையாக மறைக்கும் முகக்கவசம் அணிந்து வீடுகளுக்குள் நுழைந்து பெண்களை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் வத்தளை சூட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (26) களுத்துறை குற்றப் பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை, மஹேன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை, வாலான பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் நுழைந்து பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றமை தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து கத்தி, 4 கைத்தொலைபேசிகள் , மோட்டார் சைக்கிள், 2 முகக் கவசம் , உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளர்.

