ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

212 0

ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 31 ஆயிரத்து 828ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இவ்வருடம் இதுவரை நாட்டிற்கு வந்த மொத்த சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 58 ஆயிரத்து 68ஆக உயர்ந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் பகிரப்பட்ட சமீபத்திய தற்காலிகத் தரவுகள், ஒக்டோபர் மாதத்திற்கான வாராந்த வருகையில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

ஒக்டோபர் 01-24ஆம் திகதி வரையில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவானோர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் இலங்கைக்கு மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்ததன் காரணமாக ரஷ்ய பயணிகளின் வருகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.