தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை ஏனும் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதெ அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அரிசி விலை உயர்ந்தமை காரணமாக பொதுமக்கள் உணவு தேவைகளையேனும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத அசௌகரிய நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அரிசி விலை அதிகரித்தமை மாத்திரம் அன்றி சந்தையில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்று உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.

