நஷ்ட ஈட்டை 10 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க தீர்மானம்

116 0

மே 09 வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான நஷ்ட ஈட்டை 10 மில்லியன் ரூபா வரையில் அதிகரிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மக்கள் வாழ்க்கையையும்,நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக கடந்த  இரண்டு மூன்று நாட்களாக எந்தளவுக்கு பாடுபட்டோம் என்பதனை இங்கே சபாநாயகரும் நானும் அறிவோம். கொலைகள் செய்யும் போது சிரிக்கலாம். ஆனால் அது தொடர்பில் அழுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

கடந்த மே மாதம் 09வன்முறை சம்பவத்தின் போது  செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கான  நஷ்ட ஈட்டை 10 மில்லியன் ரூபா வரையில் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு முன்னர் இருந்த 5 மில்லியன் ரூபா வரையென்ற தொகையை 10 மில்லியனாக திருத்தியுள்ளோம் ..

கொலை தொடர்பில் கண்டனங்களை வெளியிட்டால் மட்டும் போதாது அவரின் குடும்பத்தினருக்காக செய்ய வேண்டியவற்றை செய்ய வேண்டும் என்றார்.