இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள்

352 0

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கோப்பபுலவு பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களாராஜா இதனை தெரிவித்தார்.

18 ஆவது நாளாக மக்களின் போராட்டம் தீர்வின்றி தொடரும் நிலையில் எதற்காக தொடர்ந்தும் அரசாங்கம்  இழுத்தடிப்பு செய்கின்றது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கொட்டும் பனியிலும், வெயிலும் போராட்டத்தை தொடர்வதோடு பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின்  தலைவர் அருட்தந்தை மங்களாராஜா உள்ளிட்ட அருட்தந்தையர் அணி ஒன்று இன்று மக்களை சந்தித்திருந்தனர்