இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இன்று (21) காலை 88 ஆவது வயதில் காலமானார்.
இன்றுவரை எழுத்துத்துறையில் தனக்கென தனித்துவம் கொண்டிருந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இலங்கை அரசாங்கத்தினால் ‘சாகித்திய ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார்.
அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

