மொரட்டுவை வர்த்தக நிலையக் கொள்ளை ; சந்தேக நபர் கைது

166 0

மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலைய மொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த 29 இலட்சம் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச்  சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்  கல்கிஸ்ஸ  குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து 29 இலட்சம் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த  சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபர் நேற்று மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்தெமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய ஒருவர் எனவும் அவர் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர் அலவ்வ, பாதுக்கை, வெயாங்கொடை மற்றும் ஹலாவத்த பிரதேசங்களில் இடம்பெற்ற 9 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 13 மடிக்கணினிகள், 7 டெப் இயந்திரங்கள், 9 கையடயக்கத்தொலைபேசிகள், 2 சீ.சீ.டி.வி. கேமராகள், 3 தொலைக்காட்சிகள், 7 மின் விளக்குகள், 8 சப்பாத்து ஜோடிகள், ஜெனரேட்டர் மற்றும் ஒலிபெருக்கி உட்பட பல பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.