காலி, யக்கமுல்ல – மாகெதர பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 4 வயது குழந்தை உள்ளிட்ட 2 பேர் காயமடைந்துள்ளார்கள்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

