கிளிநொச்சி மாவட்ட பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து விபத்தின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கான மரணக்கெடுப்பனவுகள் கொடுப்பனவுகள், மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ள குறித்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்;தவரின் குடும்பங்களின் நலன்களுக்காக நடமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களுக்காக, தொழிலின் போது விபத்து மரணம் அடைந்த நிலையில் விபத்து மரணக்கொடையும், தொழில் ரீதியாக நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த நிலையில் மரணக்கொடையும் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான பாராட்;டுதலும் நடைபெற்றது.
இதன்போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தால், விபத்தின்போது உயரிழந்த குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு பதினைந்து இலட்சம் ரூபாவும், தொழில் நிமித்தம் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த குடும்பம் ஒன்றிற்கு பத்து இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது. அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 100 புள்ளிகளைப் பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பனை தென்னை வள கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்கள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

