விடுதலைப்புலிகளின் தலைவர் சமஸ்டியை தழுவ மறுத்தார்! -சொல்ஹெய்ம்

181 0

தற்போதைய நெருக்கடியாலஇனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் ,தற்போயை நெருக்கடியால் தீவிரவாதம் அற்றுப்போயுள்ளதால் இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல இளையவர்கள் நாங்கள் இனியும் பிளவுபட்டிருக்கவிரும்பவில்லை என தெரிவித்தனர்.

ஆகவே இலங்கையில் அனைவரும் சிறந்த எதிர்காலத்தை அனுபவிக்கும் வகையில் அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என நான் கருதுகின்றேன்.

விடுதலைப்புலிகளின் தலைவர் சமஸ்டியை தழுவ மறுத்தார் இராணுவவழிமுறையே அனைத்திற்கும் தீர்வு என அவர் கருதினார் எனவும் பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி – இலங்கைக்குமீண்டும் திரும்பி வருவது ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகராக பணியாற்றுவதை எவ்வாறு உணர்கின்றீர்கள்?

பதில்- தனிப்பட்ட ரீதியில் இது அற்புதமான விடயம்  இலங்கை மிகவும் அழகான நாடு உலகின் தலைசிறந்த இயற்கையையும் சிறந்த மனிதர்களையும் இலங்கை கொண்டுள்ளது.

எனக்கு இங்கு நண்பர்கள் உள்ளனர் மீண்டும் திரும்பி வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவ முடிந்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை நாங்கள் கவலையுடன் உன்னிப்பாக அவதானித்து வந்தோம்,இலங்கை பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது வெளியிலிருந்து ஜனாதிபதிக்கு உதவ முடியுமென்றால் நான் உதவுவது குறித்து மகிழ்ச்சியடைவேன்.

கேள்வி – பல வருடங்களிற்கு பின்னர் மீண்டும் வந்துள்ளீர்கள் இலங்கை எவ்வாறு மாற்றமடைந்துள்ளது?

பதில்- கொழும்பில் பாரிய மாற்றங்கள் காணப்படுகின்றன அவை கண்ணிற்கு புலப்படும் விதத்தில் உள்ளன.

வீதிகள் சிறந்த விதத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் குறைவான குழிகள்

மக்களிற்கு பிரச்சினைகளிற்கு உள்ளது என்ற அறிகுறிகளை காணமுடியவில்லை நகரம் அழகாக உள்ள அபிவிருத்தியடைந்த சில நாடுகளை போல உள்ளது பல சாதகமான மாற்றங்களை நான் பார்க்கின்றேன்.

கேள்வி – இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் அடிப்படையில் எங்கள் பாதையை மீட்டமைப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பம் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்-

சந்தர்ப்பம் என்றே நான் கருதுகின்றேன்.

முதலாவதாக அனைவரும் நெருக்கடியை அனுபவித்துள்ளனர் குறுகிய காலத்திற்கு பொதுப்போக்குவரத்து என்பதே காணப்படவில்லை. வாழ்க்கை செலவு அதிகரிப்பினாலும் நாட்டில் மக்கள் துன்பத்தில் சிக்குண்டுள்ளனர்.அனைவரும் இதனை புரிந்துகொள்கின்றனர் இலங்கைக்கு புதிய பாதை தேவை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டுள்ளனர்- மிகவும் பயனளிக்ககூடிய பாதை.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பொருளாதார விடயங்களில் நிபுணர் என நான் கருதுகின்றேன்.

அவர் சர்வதேச சமூகத்துடன் சர்வதேச நிதியமைப்புகளுடன் சிறந்த உறவுகளை கொண்டுள்ளார்.பொருளாதார மீட்சியை முன்னெடுக்ககூடிய சிறந்த நிலையில் அவர் உள்ளார் என நான் கருதுகின்றேன்.

இரண்டாவதாக இது இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான ஒரு வாய்ப்பு ,தற்போயை நெருக்கடியால் தீவிரவாதம் அற்றுப்போயுள்ளதால் இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணிகளில் கலந்துகொண்டவர்களில் பலர் சிங்களவர் என்பது உண்மை எனினும் தமிழர்களும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல இளையவர்கள் நாங்கள் இனியும் பிளவுபட்டிருக்கவிரும்பவில்லை என தெரிவித்தனர்.

ஆகவே இலங்கையில் அனைவரும் சிறந்த எதிர்காலத்தை அனுபவிக்கும் வகையில் அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என நான் கருதுகின்றேன்.

 

கேள்வி – பின்னோக்கி பார்த்தால் இலங்கையின் சமாதான முயற்சிகளில் உங்களின் பங்களிப்பை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்  நாட்டில் கடந்த 13 வருடங்களாக காணப்படும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்-சமாதான முயற்சிகள் குறித்த எனது கருத்துக்களை நான் முன்னரும் தெரிவித்திருக்கின்றேன்,தற்போது நான் முன்னோக்கி பார்க்க விரும்புகின்றேன்.

சமாதான முயற்சிகளில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் காணப்பட்டன விடுதலைப்புலிகளின் தலைவரால் சமஸ்டி தீர்வை தழுவ முடியவில்லை அவர் இராணுவதீர்வே அனைத்துக்கும் பதில் என கருதினார்.

இரண்டாவது இலங்கையின் இரு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளால் நாட்டின் நன்மைக்காக ஒன்றுபட்டு செயற்படமுடியவில்லை.

இவையே பிரதானமான இரு தவறுகள் நாங்கள் எங்களால் முடிந்ததை செய்தோம் ஆனால் சமாதான தீர்வை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டோம்.

ஆனால் தற்போது அமைதி நிலவுகின்றது சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் இலங்கையை தங்கள் தேசமாக உணரும் விதத்தில்  எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்து அனைவரும் சிந்திக்கவேண்டும்.

கேள்வி- இலங்கையின் சமீபத்தைய அரசியல் ஸ்திரமின்மை குறித்த உங்கள் கருத்து என்ன?இதனை ஜனநாயக மயப்படுத்தலை நோக்கிய நகர்வாக காண்கின்றீர்களா?

பதில்- ஒட்டுமொத்தத்தில் இது சாதகமான விடயம் என்றே நான் கருதுகின்றேன் ஏற்றுக்கொள்ள முடியாத சில அளவுக்கதிகமான விடயங்கள் இடம்பெற்றது உண்மை  நீங்கள் வீடுகளை எரித்தால் அது சமூகத்திற்கு இழப்பு அது இடம்பெற்றிருக்ககூடாது.

ஒட்டுமொத்தத்தில் இது மாற்றத்திற்கான விருப்பம்,தற்போது மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலகில் இதேபோன்ற சூழ்நிலை காணப்பட்ட நாடுகளுடன்  ஒப்பிடும்போது மிகவும் குறைந்தளவு வன்முறையே காணப்பட்டது.

 

கேள்வி- இலங்கையை பொருளாதார ஆட்சிமுறை சீர்திருத்தத்தை நோக்கி நகர்த்துவதற்கான உறுதிப்பாடு உள்ளது என கருதுகின்றீர்களா?

பதில்-அனைத்து தரப்பிலும் அதற்கான உறுதிப்பாடு உள்ளது என நான் கருதுகின்றேன்.ஆனால் இது கடினமானது.

இலங்கை வியட்நாம் சிங்கப்பூர் போன்று முன்னேறுவதற்கு ஆட்சி முறை சீர்திருத்தங்கள் அவசியம்.

ஆட்சி முறை பொருளாதார சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால் இலங்கை எதிர்பார்க்கின்ற மாதிரி வேகமாக அதனை அபிவிருத்தி செய்வது கடினம்.