உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு உத்தரவாதத் திட்டத்தை அமுல்படுத்துவதில் இடையூறு ஏற்பட்டால், அரச பாதுகாப்பு விதிகளின் ஊடாக தலையிடத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு இராணுவ ரீதியாக மட்டும் உறுதிப்படுத்தப்படாமல் உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பின் மூலமும் பாதுகாக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உத்தரவாதத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு எரிபொருள் மற்றும் உணவு வழங்குவதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தேவைப்பட்டால் அரச பாதுகாப்பு விதிமுறைகள் ஊடாக தலையிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

