தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி.

349 0

தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி

10.10.1987 ‘அன்று யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் நினைவு நாள் யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
2ம் லெப். மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழ போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தார்.அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. தமிழ்த் தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே மாலதி அக்காவின் இலட்சியமாக அமைந்தது.