அரச நிறுவனங்களில் பாரியளவிலான ஊழியர்கள் பற்றாக்குறை

200 0
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங்களில் பாரியளவிலான ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கான புதிய ஆட்சேர்ப்புகளை தற்போது மேற்கொள்ள முடியாத நிலையில், தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள இளம் ஊழியர்களுக்கு போட்டிப் பரீட்சை நடத்தி அது தொடர்பான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.