அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உயர்ஸ்தானிகரைச் சந்தித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

