வடக்கில் இந்திய அரசாங்கம் அரசியல் கட்சிகளை உருவாக்கி, முரண்பாடுகளையும் உருவாக்குகின்றது

365 0

anurakumara.jpeg-copyஇந்­திய அர­சாங்கம் வடக்கில் அரசியல் கட்­சி­க­ளையும் அர­சியல் அமைப்­புக்­க­ளை யும் உரு­வாக்கி அவர்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களை உரு­வாக்­கு­கின்­றது. இதன் பின்­ன­ணியில் இந்­திய றோ செயற்­ப­டு­கின்­றது எனத் தெரி­வித்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, இந்­தி­யாவை நம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­ற­வர்கள் அவற்றில் இருந்து விடு­பட்டு மீண்­டெழ வேண்டும் என தெரி­வித்தார்.

யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற் ­கொண்­டி­ருந்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸ­நா­யக்­க­விடம் இந்­திய அரசின் இலங்கை மீதான நிலைப்­பாடு தொடர்­பாக கேட்­கப்­பட்­ட­போதே அவர் இவ்வாறு தெரி­வித்­தி­ருந்தார்.குறித்த விடயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,இந்­தி­யா­வா­னது இலங்­கை­யுடன் ஒப்­பி­டு­கின்ற போது சக­ல­து­றை­க­ளிலும் மிகவும் கீழ்­மை­யான நிலை­யி­லேயே உள்­ளது.

குறிப்­பாக கல்வி. சுகா­தாரம், வேலை­வாய்ப்பு, வீட­மைப்பு, பொரு­ளா­தார, சமூக கட்­ட­மைப்பு என சக­ல­வற்­றிலும் கீழ்­மை­யான நிலை­யி­லேயே உள்­ளது. இதனால்தான் இந்­தியா இலங்­கையின் கடல்­வ­ளத்தை, பொரு­ளா­தா­ரத்தை, அது­சார்ந்த வளங்­களை கைப்­பற்­று­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது.

இத­ன­டிப்­ப­டையில் இலங்­கைக்கு இந்­தியா கடன்­களை வழங்கி அதா­வது மத­வா ச்­சியில் இருந்து தலை­மன்னார் வரை, ஓமந்­தையில் இருந்து காங்­கே­சன்­துறை வரை, துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கு என அனைத்­தையும் செய்­வது இங்­குள்ள வளங்­க­ளையும் பொரு­ளா­தா­ரத்­தையும் தன் வசப் ப­டுத்­தவே தவிர, இங்­குள்­ள­வர்­க­ளுக்கோ, அல்­லது வடக்கு மக்­க­ளிற்­கா­கவோ அல்ல.

மேலும் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­திற்கு அண்­மை­யி­லுள்ள இலங்கை எரி­பொ ருள் கூட்­டு­தா­ப­னத்­திற்கு சொந்­த­மான எரி­பொருள் குதங்­களை இந்­திய ஐ.ஓ.சி நிறு­வனம் கைப்­பற்­றிக்­கொண்­டது.
அது­போல புல்­மோட்­டை­யி­லுள்ள கனி­ய­ ம­ணல்­களை இந்­தியா கைப்­பற்­றிக்­கொண்­டது. நீலா­வரை கடற்­க­ரையில் இந்­திய உல்­லாச விடு­தி­களை அமைப்­ப­தற்­காக கைப்­பற்­றி­யுள்­ள­து. இவற்றால் இலங்­கையில் பாரிய இழப்­புக்கள் ஏற்­ப­டு­வ­துடன் அர­சாங்­கத்­திற்கு பாத­க­மா­கவும் உள்­ள­து.

யுத்­தத்தின் பின்னர் இலங்­கை­மீது இந்­தியா பாரிய திட்­டங்­களை வகுத்­துள்­ளது. இதில் கடல்­தொழில் பிர­தா­ன­மா­னது. அவர்­க­ளுக்கு தேவைப்­படும் வளங்­களை அடை­வ­தற்கு அர­சியல் ரீதி­யா­கவும் முயற்­சிக்­கின்­றார்கள். இந்­திய இழு­வைப்­ப­ட­குகள் இலங்கை கடற்­ப­ரப்பில் மீன் பிடிப்­ப­த­னூ­டாக இலங்­கையின் கடல் வளத்தில் மீன்கள் உரு­வா­கு­வ­தற்­கான சூழல் இல்­லாமல் செய்யும் வகையில் கடல்­வ­ளங்­களை அழிக்­கின்­றார்கள்.

அவ்­வாறு இந்­திய மீன­வர்­க­ளது வரு­கை யும் அவர்­க­ளது மீன்­பிடி நட­வ­டிக்­கையை யும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்ற நட­வ­டிக்­கை­களை இலங்கை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும். ஆனால் அவ்­வாறு இங்கு இல்லை. அவர்கள் கேட்­ட­வுடன் இலங்கை அர­சாங்கம் அடி­ப­ணி­கின்­றது. இந்­தி ­யா­வி­னு­டைய வழி­ந­டத்­த­லி­லேயே இங்­குள்­ள­வர்கள் உள்­ளனர்.

மேலும் வடக்­கையும் யாழ்ப்­பா­ணத்­தையும் நோக்­கு­கையில் அர­சியல் கட்­சி­க­ளையும் அர­சியல் அமைப்­புக்­க­ளையும் உரு­வாக்கி அவற்­றுக்­கி­டையில் முரண்­பா­டு­களை உரு­வாக்கி விடு­கின்­றனர். இவற்றை இந்­திய றோ அமைப்­பினர் செயற்படுத்தி வருகின்றனர். இதுதான் உண்மை.

இந்தியா வடக்கு மக்களை காட்டி அரசாங்கத்திடமிருந்து தனது தேவைகளை செய்கின்றது. எனவே, இந்தியா நம்மை பாதுகாக்கும் என நம்புகின்றவர்கள், இந்தியாவின் பின்னால் ஓடுபவர்கள் அதிலிருந்து விடுபட்டு மீண்டெழ வேண்டும். மேலும் இந்தியாவினுடைய ஆக்கிரமிப்பை இல்லாது செய்வதற்கு மக்கள் முன்வர வேண்டும். மக்களுடைய சக்தி மூலமாக அதனை தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.