யேர்மன் முன்சன் தமிழாலயத்தில் இணைந்த 7 மாணவர்கள்.

761 0

02.10.2022 அன்று யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் சிறப்பாக கால்கோள் நிகழ்வு நடைபெற்றது. தமிழால் இணைந்த இச் சிறார்களை ஆசிரியர்கள், மாணவர்கள், பாட்டன் பாட்டி, பெற்றோர்கள் முன்னிலையில், எமது தமிழாலய ஆசிரியர்கள் இனிப்புப்பொதி, பாடநூல்கள் வழங்கி வரவேற்றுக் கொண்டனர்.