ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது அவுஸ்திரேலியா

98 0

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ரஸ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதை தொடர்ந்து அவுஸ்திரேலியா ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளது.

ரஸ்யாவினால் நியமிக்கப்பட்டுள்ள 28 பிரிவினைவாதிகள் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களிற்கு எதிராகவே அவுஸ்திரேலியாதடைகளை அறிவித்துள்ளது.

இவர்கள் உக்ரைனில் மொஸ்கோவின் நடவடிக்கைகளை சட்டபூர்வமானதாக்குவதற்காக சர்வதேச சட்டத்தை மீறுவது போலியான வாக்கெடுப்புகள் தவறான தகவல்களை வெளியிடுதல் மற்றும் மிரட்டல்களில் ஈடுபட்டனர் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை தன்னுடன் இணைக்கும் ரஸ்யாவின் நடவடிக்கையை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் புட்டினின் இந்த நடவடிக்கையையும் அதனை நடைமுறைப்படுத்துபவர்களிற்கும் அவுஸ்திரேலியா தனது கடும் ஆட்சேபணையை வெளியிடுகின்றது இதனையே மேலதிக தடைகள் வெளிப்படுத்துகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டென்மார்க் உட்பட பல நாடுகளுடன் இணைந்து சர்வதேச நீதிமன்றத்தில் ரஸ்யாவிற்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளது.