ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்(காணொளி)

281 0

நுவரெலியா, ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவமும், தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு விழாவும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது.

அனைத்து வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ள 800 பேர் அமரகூடிய புதிய கட்டிடத்திற்கு மத்திய மாகாண அமைச்சு 570 இலட்சம் ரூபாவும், தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கு 165 இலட்சம் ரூபாவும் செலவு செய்துள்ளனர்.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சிறீலங்கா சுதந்திரகட்சியின் மஸ்கெலியா மற்றும் நுவரெலியா தொகுதி அமைப்பாளர்களான டபிள்யூ.ஜீ.ரணசிங்க, தர்மபிரிய, பாடசாலை அதிபர் வசந்தகவிராஜ், உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.