இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிற்கு ஜப்பான் ஆதரவு

74 0

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு தயார் என ஜப்பான் தெரிவித்துள்ளது.

இலங்கையின் 30 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கும்  பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளிற்கும் உதவ தயார் என இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் முக்கியமான ஒன்றான ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர்தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் நிதி உதவியை பெறுவதற்கு  இலங்கை  கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வருவது அவசியம்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் இறுதி உடன்பாட்டிற்கு வருவதற்கு உதவுவதற்காக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிற்கு உதவுவதற்கு ஜப்பான் தயார் என ஹிடோக்கி மிசுகோசி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பத்து மில்லியன் டொலர் இரு தரப்பு கடனில் ஜப்பானின் கடன் 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கத்தினதும் சர்வதேச நாணயநிதியத்தினதும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் இலங்கையின் முக்கிய வர்த்தக சகாவாகவும் காணப்படுகின்றது.

சீனா இலங்கை உட்பட ஏனைய கடன் வழங்கும் நாடுகளுடன் ஆக்கபூர்வமான செயல்பாட்டை முன்னெடுக்கவுள்ளது என தூதுவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை தவறாக கையாண்டமை மற்றும் இலங்கையின் வருமானம் ஈட்டி தரும் சுற்றுலாத்துறையை முற்றாக செயல் இழக்கச்செய்த  கொவிட்பெருந்தொற்று ஆகியவற்றின் விளைவே  பொருளாதார குழப்பநிலை.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிக்கும் ஆனால் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னரே பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை ஜப்பான் முன்னெடுக்கும் என தூதுவர் தெரிவி;த்துள்ளார்.

எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி முடிவிற்கு வந்ததும்,பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளபோது நாங்கள் அந்தபேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற பொருளாதார கொள்கைகள் நடைமுறைத்தலையீடுகள் காரணமாக முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன இந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகின்றேன் என தெரிவித்துள்ள ஜப்பான்தூதுவர் இலங்கையில் முதலீடு செய்வதற்கான சூழல் மேம்படும் என நம்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.