அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

105 0

தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, அரச செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான சுற்றுப்பயணங்களுக்கு அவசியமான அலுவலர் அல்லது குறித்த சுற்றுப்பயணக் கடமைகளுக்கு அத்தியாவசியமான ஒருசிலரை மாத்திரம் பங்கேற்கச் செய்தல் வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.