பாராளுமன்ற ஊடகவியலாளர்களின் உணவில் சணல் நூல்

71 0

பாராளுமன்றத்தில்  ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பகல் உணவில் நெத்தலி மீனுடன் நீண்டதொரு சணல் நூல்  காணப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று மதிய நேர உணவுக்கு பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் உணவகத்தில் உணவு பரிமாரிக்கொண்டிருக்கையில் ஊடகவியலாளர் ஒருவரின் உணவுத்தட்டில் இருந்து சுமார் ஒரு அடி நீளமான சணல் நூல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத்தாெடர்ந்து குறித்த ஊடகவியலாளர் உடனே  உணவக பிரிவு  பிரதானிக்கு அதுதொடர்பில் முறைப்பாடு செய்து சணல் நூலை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

நெத்தலி மீனுடன் சணல் நூல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சில ஊடகவியலாளர்கள் உணவு உட்கொள்வதை நிறுத்திக்கொண்டார்கள்.

இதேவேளை, பாராளுமன்ற உணவத்தினால் நேற்று விநியோகிக்கப்பட்ட மீன் நஞ்சானதில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கடும் சுயயீனமுற்று நாரஹென்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

பாராளுமன்ற வைத்திய மத்திய நிலையத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் அம்பியூலன்ஸ் மூலம்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணிப்பின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது