ரோயல் பார்க் கொலையாளி நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் இடைக்கால தடை

41 0

ரோயல் பார்க் கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் அன்டனி ஜெயமக நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ரோயல்; பார்க் கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் அன்டனி ஜெயமக நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் இடைக்கால தடை விதிக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோயல்பார்க் கொலையாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியதை இடைநிறுத்தவேண்டும்  உத்தரவிடவேண்டும்என கோரி பெண்கள் மற்றும் ஊடகவியலாளர் கூட்டமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம்இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இலங்கையில் வசித்த சுவீடன் யுவதி இவான் ஜோன்சன் (19) 2005 ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி ராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் தொடர்மாடியில்  படுகொலை செய்யப்பட்டார்.