பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளாபன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்ர்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
கோவை மற்றும் திருச்சி மண்டலங்களில் தான் இந்த நோயால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த ஜனவரி 27-ந் தேதி தொடங்கி இன்று வரையிலான 18 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதைவிட, அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது தான் மிகவும் முக்கியமாகும். மூச்சுத் திணறல், வேகமாக மூச்சு விடுதல், சளி, நீண்ட தூக்கம், வாந்தி, சோர்வு, தோல் நீலம் அல்லது பழுப்பு நிறத்தில் மாறுதல் போன்றவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்.
பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவிவரும் சூழலில் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றின் மூலம் பன்றிக்காய்ச்சல் நோயால் தமிழகத்தில் இனி எவரும் உயிரிழக்க மாட்டார்கள் என்ற நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

