தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்அமைச்சராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்அமைச்சராக வி.கே.சசிகலாவை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது வி.கே.சசிகலா முதல்அமைச்சராக பதவி ஏற்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னர் அவரை விடுதலை செய்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து இன்றுதீர்ப்பு வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது

