அரிசி உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலகிய அரிசி ஆலை உரிமையாளர்கள்

370 0
அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அரிசியை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால், அரிசி உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மரதகஹமுல்ல அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ. கே. ரஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.
சம்பா அரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும், நாட்டு அரிசி 72 ரூபாவாகவும், பச்சை அரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை உற்பத்தி செய்ய முடியாது.
இதன் காரணமாக ஒரு கிலோ அரிசிக்கு 23 ரூபா அளவில் நட்டத்தை ஏற்கவேண்டியுள்ளது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் 150 அரிசி ஆலை உரிமையாளர்கள் பேச்சு நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ. கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிகபட்ச சில்லறை விலைக்கு விற்கக் கூடிய அரிசியை, மொத்த விற்பனை சந்தையில் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.