வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது
இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் வடமாகாண ஆசிரியர்கள் சங்கம் என்பன இதற்கான ஒழுங்கை மேற்கொண்டிருந்தன.
கடந்த வருடம் கஷ்ட பிரதேசங்களுக்கான ஐந்தாண்டு கால கடமைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்கள், இடமாற்றம் கோரி கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
இதன்போது ஒழுக்கவீனமாக நடந்து கொண்டதாக தெரிவித்து மூன்று ஆசிரியர்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் பணி நீக்கம் செய்யயப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு நியாயம் கோரியே இன்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்த விளக்கத்தைப் பெறுவதற்கு வடமாகாண கல்வி அமைச்சரவை தொலைபேசியில் அழைத்த போதும், அவர் அதற்கு பதில் வழங்கவில்லை.

