கொச்சிக்கடை, தளுவகொடுவ பிரதேசத்தில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலர் காவலாளியின் கை கால்களை கட்டி விட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்களில் இருந்து சுமார் 80,000 ரூபா பெறுமதியான மூன்று ஜோடி பக்கவாட்டு கண்ணாடிகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மறுநாள் உரிமையாளர் வந்து காவலாளி யை தேடிய போது அவரது சடலத்தைக் கண்டுள்ளார்.
உயிரிழந்தவர் 66 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

