தென்சூடான் போரில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்பினர்

356 0

south-sudan-oil-heglig-415x260தென்சூடானில் உள்நாட்டு போரில் சிக்கிய இந்தியர்கள் சிலர் நேற்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அங்கு இடம்பெற்றுவரும் தொடர் வன்முறைகளால் அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவகள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்.
தெற்கு சூடானில் தலைவர் சல்வா கிர் தலைமையிலான அரச படைகளுக்கும், துணை தலைவர்; ரீக் மச்சாரின் ஆதரவுப் படைகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த திங்கட் கிழமை அதிபர் சல்வா கிர் சார்பில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் வன்முறைகள் ஆரம்பிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளினால் இதுவரை, 270க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் வன்முறைகள் ஆரம்பிக்கும்அபாயம் நிலவுவதால், சுமார் 36 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.