ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தை 14 நாட்களில் இருந்து 30 நாட்களாக இலங்கை ரயில்வே திணைக்களம் அதிகரித்துள்ளது.
அதற்கமைய செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் பயணிகள் தங்கள் பயணத்துக்கு 30 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, டிக்கெட் தட்டுப்பாடு காரணமாக முன்னர் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளை பயன்படுத்துவதற்கும் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

