சிறுவர்கள், தாய்மாரின் மந்த போசனை குறித்த கேள்விக்கு உரிய பதில் கிடைக்கவில்லை

214 0

பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் மந்தபோசணை மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடு தொடர்பில் முன்வைத்த கேள்விக்கு அரசாங்கமும் பதிலளிக்கவில்லை,பொறுப்பான அமைச்சரும் பதிலளிக்கவில்லை.

அரசாங்கத்தினதும்,பொறுப்பான அமைச்சரினதும் செயற்பாடு கவலைக்குரியதுடன்,அதிருப்தியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்..

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மார்களின் மந்த போசனை தொடர்பான சபை ஒத்திவைப்பின் இரண்டாவது நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் மந்தபோசணை மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடு பாதிப்பை எதிர்கொண்டுள்ளமை குறித்து சர்வதேச மட்டத்தில் அவதானம் செலுத்தியுள்ள போதும் அது குறித்து அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை தெரிந்துக்கொள்வதற்காக பாராளுமன்றில் இரு நாட்களாக சபை ஒத்திவைப்பு விவாதம் இடம் பெறுகிறது.இருப்பினும் பொறுப்பான சுகாதாரத்துறை அமைச்சர் இரு நாள் விவாதத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

எதிர் தரப்பினர் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்க ஆளும் தரப்பின் உறுப்பினர்களும்,பொறுப்பான அமைச்சரும் சபையில் இல்லை.இது எமது சபை ஒத்திவைப்பு விவாதத்தையும்,பிள்ளைகள் மற்றும் தாய்மார் எதிர்கொண்டுள்ள பிரச்சினையையும் மலினப்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் மந்தபோசணை மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடு தொடர்பில் முன்வைத்த கேள்விக்கு அரசாங்கமும் பதிலளிக்கவில்லை,பொறுப்பான அமைச்சரும் பதிலளிக்கவில்லை.அரசாங்கத்தினதும்,பொறுப்பான அமைச்சரினதும் செயற்பாடு கவலைக்குரியதுடன்,அதிருப்தியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.