கொழும்பு மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போதைக்கு அடிமை

99 0

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என எதிர்தரப்பின் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கணடவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன. விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான தன்மையில் அதிகரித்துள்ளன. ஹெரோயின் போதைப்பொருள் பாவனையை காட்டிலும் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனை சமூக மட்டத்தில் தீவிரமடைந்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஐஸ் போதை பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பாரதூரமானது. ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் குறுகிய காலத்தில் சுகாதார ரீதியில் பாதிக்கப்பட்டுவார்கள்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் சமூக பாதுகாப்பிற்கும்,சாதரண மக்களின் அன்றாட வாழ்விக்கும் அச்சமூட்டும் நிலையில் உள்ளார்கள்.

கொழும்பு மாவட்டத்தில் மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 50,000 அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு பாரதூரமான முறையில் அடிமையாகியுள்ளார்கள்.

பெற்ற பிள்ளையை தந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தல், வீட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

போதைப்பொருள் பாவனையை தேசிய பிரச்சினையாக கருத்திற்கொண்டு போதைப்பொருள் பாவனை ஒழிப்பிற்கு உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாளர்களை புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களால் சமூகத்தில் அச்சுறுத்தல் நிலை காணப்படுகிறது. போதைப்பொருள் பாவனையை முழுமையாக ஒழிக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.