ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

187 0

மன்னார் பகுதியில் 10 கிலோ 400 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை (31) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மன்னார் பொலிஸ் இராணுவ வீதி தடை அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 10 கிலோ 400 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கப் வண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் மன்னார் மற்றும் தலைமன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சந்தேகநபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.