கொழும்பில் இன்று இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியினால் மருதானை டீன்ஸ் வீதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்ட னர்.
இதையடுத்தே, குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

