அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (30) முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு, மருதானை டீன் வீதி பகுதியில் வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
“ அடக்கு முறையை நிறுத்து” , “ரணில் – ராஜபக்ஷ அராஜகத்தை விரட்டியடிப்போம்” என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

