முல்லைத்தீவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!

202 0

முல்லைத்தீவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  இன்று (30) புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் இன்றோடு 2000 நாட்களை எட்டுகின்றதை அடையாளப்படுத்தும் வகையிலும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி புதுக்குடியிருப்பு நகரம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது.

இந்த பேரணியில் காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், சிவநேசன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.