கணினி துறையில் நல்ல தொழிலில் இருப்பதே இலக்கு!

202 0

கணினித் துறை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்குவதே எனது இலக்கு என யாழ். மத்திய கல்லூரியின் மாணவன் ஞா.சூர்யா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 15ஆம் இடத்தையும் குறித்த மாணவன் சூரியா பெற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்.மத்திய கல்லூரியில் கணிதப் பிரிவில் குறித்த மாணவன் படித்து இன்று பாடசாலை சமூகத்திற்கும் குடும்பத்தினருக்கும் பெறுமை சேர்த்துள்ளார்.

உயர் சித்திகளைப் பெற்றுக்கொண்ட மாணவன் சூரியா தன்னுடைய எதிர்கால இலக்குகள் குறித்து பகிர்ந்தார்.