இந்தியா வசம் மன்னார் தீவு உள்ளிட்ட வடக்கின் கடற்கரைகள் தாரைவார்ப்பட்டுள்ள தாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் மண்ணினை பாதுகாக்க பொதுமக்கள் களமிறங்கியுள்ளனர்.
மன்னார் தீவுப்பகுதியில் இடம்பெறும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மூலமான மின் உற்பத்திக்கான கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றிருந்தது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதியம் 12 மணி வரை நகரப் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதோடு, தனியார் போக்குவரத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

