வடக்கில் பூதாகரைமான பிரச்சினையாகவும் மக்களின் உணா்வுபூரமான விடயமாகவும் காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினை.
இந்த காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. அதற்காக உருப்படியான வேலைத்திட்டத்தை இதுவரை வரை அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை என ஜேவிபியின் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்,
யுத்த காலத்தில் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் விடயத்திலும் அரசின் நடவடிக்கைள் தோல்வி அடைந்துள்ளது.
யுத்தத்தை காரணம் காட்டி இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மீளவும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்த விடயத்தில் அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்ததாக காணமுடியவில்லை. இதனால் இந்தப் பிரச்சினை மேலும் மேலும் உக்கிரமடைந்த பிரச்சினையாக காணப்படுகிறது.
கடற்றொழில் விவசாயிகளின் பிரச்சினைகள் பெரிய பிரச்சினையாக காணப்படுகிறது.
குறிப்பாக எமது கடற்பரப்பில் இந்திய மீனவா்களின் ஆக்கிரமிப்பு காரணமாக எமது கடல் வளங்களை சூறையாடுவதோடு, எமது கடற்றொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.
இந்தப் பிரச்சினைககு இதுவரை அரசு அங்கேயும் இங்கேயும் காய்களை நகர்ததியிருக்கிறதே தவிர, அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.
கடற்றொழிலாளா்களின் பிரச்சினையில் முன்னைய அரசு போன்றே தற்போதைய அரசும் நடந்து கொள்வதனை காணக் கூடியதாக உள்ளது.
அது மாத்திரமல்ல, இந்தியாவுக்கு அடிபணிந்த இந்தியாவின் வார்த்தை ஜாலங்களுக்கு செவிமடுகின்ற அரசாகவும் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்த அரசாகவும் இந்த அரசாங்கம் காணப்படுகிறது.
வட பகுதியில் மக்கள் இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் தென்பகுதியில் மக்களுக்குச் சொந்தமான வளங்களை வெளிநாட்டுக்கு தாரை வார்க்கின்றன நடவடிக்கையில் அரசு ஈடுப்பட்டுள்ளது.
இது அனைவருக்கும் தெரிந்த விடயம். அம்பாந்தோட்டையில் இருக்கின்ற 15 ஆயிரம் ஏக்கா் காணி வெளிநாட்டுக்கு தாரை வாா்க்கின்றது.
அதுமாத்திரமன்றி அம்பாந்தோட்டை துறைமுகம் வெளிநாட்டுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இவ்வாறு மக்களுக்குச் சொந்தமான காணிகளை வளங்களை நீண்ட கால குத்ததைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசு தாரைவார்க்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது எனவும் குறிப்பிட்ட அவர்,
இவ்வாறு நாடு முழுவதும் மக்கள் பொதுப் பிரச்சினையை எதிர்கொள்கின்ற போது மக்கள் தனித்தனியாக போராட்டங்களை நடத்துவதனை விடுத்து வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு என அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் அதற்காக மக்கள் விடுதலை முன்னணி மக்களை அணி திரட்டி வருகிறது எனவும் தெரிவித்தார்.

