கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

203 0

களுத்துறை – மதுகம பகுதியில் உள்ள கடையொன்றுக்குள் அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

23 ஆம் திகதி செவ்வாய்கிழமை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மதுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போபிட்டிய சந்தியில் உள்ள கடையொன்றில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்களினால் கடையின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த பிரிதொருநபர்  மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இவ்வாறு உயிரிழந்தவர் 37 வயதுடைய போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.