இலங்கைக்கான நிதிஉதவி குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.
இலங்கை தனது 70 வருடகால வரலாற்றில் சந்தித்துள்ள மிகமோசமான நிதிநெருக்கடிக்கு மத்தியில் 29 பில்லியன்டொலர் கடன்மறுசீரமைப்பு திட்டம் உட்பட இலங்கைக்கான நிதியுதவியை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளிற்காக சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக 8 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நிதி கொடுப்பனவு அமைப்புடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்கான தீவிர முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ள தருணத்தில் மூன்று மாதங்களில் இரண்டாவது தடவை சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியையும்நிதியமைச்சின் குழுவினரையும் சந்திப்பார்கள் என ஜனாதிபதி செயலகத்தை சேர்ந்த அதிகாரியொருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச மற்றும் நிதி ஆலோசகர்களையும் சந்திக்கவுள்ளனர்.
செப்டம்பரில் சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக இலங்கையின் கட்டுப்பாடற்ற கடனிற்கான நிலையான பாதையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதே இந்த பேச்சுவார்த்தைகளில் மிகவும் சவாலான விடயமாக காணப்படுகின்றது.
கடந்த வருட இறுதியில் இலங்கையின் கடன்கள் அந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114 வீதமாக காணப்பட்டது.
இலங்கை அதிக கடன்பெற்ற நாடுகளாக ஜப்பானும் சீனாவும் காணப்படுகின்றன -சீனாவிற்கு இலங்கை 3.5 பில்லியன் டொலர் கடனை செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளில் சீனா மற்றும் உள்நாட்டு கடன்களை எவ்வாறு உள்வாங்குவது என்பதே முக்கிய விவகாரமாக காணப்படுகின்றது என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனா பிரச்சினையின் ஒருபகுதி தீர்வின் ஒருபகுதியாகவும் காணப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

